பேராதனை மருத்துவமனையில் இன்று பெண் ஒருவர் ஒரே சூலில் ஐந்து குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். சத்திரசிகிச்சை மூலம்இந்த குழந்தைகள் பிரசவம் இடம்பெற்றுள்ளது.
Tamil News
Thursday, July 3, 2014
அம்பாறையில் முதன் முறையாக உலங்குவானூர்தியில் பூமழை பொழிய இடம்பெற்ற தேர்த்திருவிழா
அம்பாறை மாவட்டத்தின் மிகவும் பழமைவாய்ந்த ஆலயங்களுல் ஒன்றாகவும் தமிழர்களின் வரலாற்றினை உலகறியச்செய்த ஆலயமாகவும் உள்ள வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா முதன் முறையாக உலகுவானுர்தி மூலம் பூமழை பொழிய இன்று சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் இன்று 3 ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றதுடன் நாளை வெள்ளிக்கிழமை காலை தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது.
இந்த வீரர்முனை ஆதிகால ஆட்சி வரலாற்றில் முக்கியமான ஒரு இடமாக காணப்பட்டது.
அதாவது கி.மு.237 தொடக்கம் கி.மு.215 வரையான காலப்பகுதியில் கூர்த்திகன் என்னும் தமிழ் மன்னன் தன் சகோதரனான சேனன் என்பவனுடன் இணைந்து அக்காலப்பகுதியில் அநுராதபுரத்தினை ஆட்சிசெய்த “சூரதீசன்” என்ற மன்னனை போரில் வெற்றி கொண்டு அநுராதபுரத்தை ஆட்சி செய்தான் என்பதனை மகாவம்சத்தினூடாக அறிய முடிகின்றது.
கூர்த்திகன் கி.மு.3ம் நூற்றாண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரத்தை அமைத்தான் எனவும் வீரர்முனை என அழைக்கப்படுகின்ற இவ்விடத்தில் காவல் அரண்களை அமைத்ததாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறு போர்வீரர்கள் காவல் அரணில் அமர்த்தப்பட்டதனால் “வீரர்முனை” என பெயர் வழங்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை. இவ்வாறான வரலாற்று சிறப்புக்கள் வாய்க்கப்பெற்ற வீரர்முனையிலே சீர்பாததேவியும் அவளுடைய குழுவினரும் வந்த கப்பல் கரை தட்டியது.
இதன்படி சீர்பாத தேவியினால் கொண்டுவரப்பட்ட விக்ரகம் பிரதிஸ்டை செய்யப்பட்டு காலம்காலமாக வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் காலம் காலமாக இப்பகுதியில் தமிழ் மக்களை அப்புறப்படுத்திவிட்டு அவர்களின் காணிகளை சூறையாடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தபோதிலும் அந்த முயற்சிகள் விநாயகப்பெருமானின் அருளினால் தடுக்கப்பட்டது.
இதன் உச்சமாக 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தின் ஆதரவுடன் இந்த கிராமத்துக்குள் புகுந்த ஊர்காவல் படையினர் பெண்கள்,குழந்தைகள் என 155 க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்ததுடன் வீரமுனை மக்களையும் துரத்தியடித்தனர். அவர்களது காணிகளையும் அபகரிக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.
இவர்கள் திருக்கோவில், தம்பிலுவில் ஆகிய பகுதிகளில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தபோதிலும் தங்களது கிராத்துக்கு செல்லவேண்டும் என்ற முனைப்புக்கொண்டிருந்ததன் காரணமாக அன்றைய பாராளுமன்ற உறுப்பினரும் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் (ஜனா)முயற்சியினால் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.
இன்று சகல வளங்களுடனும் வீரமுனை மக்கள் வாழ்வதற்கு வழியேற்படுத்திய சிந்தாயாத்திரைப்பிள்ளையாருக்கு கோலாகலமாக வீரமுனை மக்கள் விழா எடுத்துவருகின்றனர்.
இதன் கீழ் இன்று காலை ஆண்டியர் சந்தியில் உள்ள முத்துலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி இடம்பெற்றது.இந்த பாற்குட பவனியில் பிரதியமைச்சர் வீரசேகரவும் கலந்துகொண்டார்.
பல்வேறு கலாசார நிகழ்வுகளுடன் யானை பவனி வர பாற்குட பவனி சிறப்பாக நடைபெற்றதுடன் மாலை தேர்த்திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் முதன்முறையாக இந்த ஆலயத்தில் உலங்குவானூர்தி மூலம் தேர்த்திருவிழாவுக்கு பூமழை பொழிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட நாஸாவின் ‘பறக்கும் தட்டு
அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த சனிக்கிழமை பறக்கும் தட்டு எனக் கூறப்படும் எல்.டி.எஸ்.டி எனும் வேகக்குறைப்பான் ஒன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது
குறை அடர்த்தியில் ஒலியை விட வேகமாகப் பறக்கும் பொருளின் வேகத்தை கட்டுப்படுத்தும் எல்.டி.எஸ்.டி எனும் இவ்வேகக் குறைப்பான் ஹவாயிலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் சோதனை செய்யப்பட்டது.
பலூனூடன் இணைத்து அனுப்பட்ட எல்.டி.எஸ்.டி பின்னர் பிரிந்து மணிக்கு சுமார் 3000 கி.மீ எனும் வேகத்துக்கு கட்டுபடுத்தப்பட்டுள்ளதாக நாஸா தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரக ஆராய்ச்சயில் இதன் பயன்பாடு மிக அவசியமாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது.
இருப்பினும் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் தற்போது இதனை பயன்படுத்தப்போவதில்லை எனவும் மேலும் இரு எல்.டி.எஸ்.டி சோதனை செய்யப்படவுள்ளதாகவும் நாஸாவின் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

மழை, மண்சரிவு எச்சரிக்கையினை விடுத்துள்ள வானிலை அவதான நிலையம்
சமூக வலைதளமான பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல் வெளியானதால் மாணவி தற்கொலை…
சமூக வலைதளமான பேஸ்புக்கில் தனது புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல் வெளியானதை அடுத்து கொல்கத்தாவில் 11 வகுப்பு மாணவி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
கொல்கத்தாவில் பள்ளி ஒன்றில் படிக்கும் 17 வயது மாணவிக்கு பைசல் இமாம் கான் என்ற கல்லூரி மாணவன் பேஸ்புக்கில் நண்பராக இணைந்துள்ளனர்.
விரைவில் இருவம் மிகவும் நெருங்கிய நண்பராக மாறியுள்ளனர். பின்னர் பைசலுடனான கலந்துரையாடலை மாணவி சில காரணங்களுக்காக நிராகரித்து வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பைசல் தனது நண்பர்களுடன் இணைந்து மாணவியை பழிவாங்க திட்டம் தீட்டியுள்ளான். பைசல் தனது நண்பர்கள் தீபக், சதீஷ் ஆகியோருடன் இணைந்து மாணவியின் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாசமான தகவல்களை பேஸ்புக்கில் பரவ விட்டுள்ளனர். மாணவியை கால் கேள் போன்று சித்தரித்து ஆபாசமாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து மாணவியின் செல்போனுக்கு சில தகாத அழைப்புக்கள் வந்துள்ளன. இதனையடுத்து மாணவி பேஸ்புக்கை பார்த்த போது உண்மை தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவமானத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
மாணவியின் 6 பக்கம் தற்கொலை கடிதம் சிக்கியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் பைசல் மற்றும் அவனது நண்பர்கள் சதிஷ் மற்றும் தீபக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

லண்டன் தீ விபத்தில் இலங்கைப் பெண் மரணம்! கணவர் வைத்தியசாலையில்..
லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டு உள்ளார். (02.07.14) அதிகாலை 2.10 மணியளவில் ஏற்பட்ட தீயினால் மரணம் அடைந்த பெண் வீட்டின் முதலாவது தளத்தில்; சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணின் கணவர் வீட்டில் இருந்து வெளிப்புறமாக பாய்ந்து தீயின் புகையினாலும் காயங்களாலும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வோத்தம்ஸ்ரோ, வூட்போர்ட், லெயிஸ்ரன் பகுதிகளில் இருந்து சென்ற தீயணப்புப் படை வீரர்கள் அதிகாலை 3.05 மணியவில் தீயைக் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்துள்ளதாகவும் தீயிற்கான காரணம் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர் 55 வயதுடைய தமிழ்ப் பெண்ணொருவர் என அடையாளம் காணப்பட்டு உள்ள போதும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவற்துறையினரால் இதுவரை பெயர் வெளியிடப்படாமையினல் இங்கு பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி உலகின் இரண்டாவது தலைசிறந்த அரசியல்வாதி: பேஸ்புக் தலைமை அதிகாரி புகழாரம்
பிரதமர் நரேந்திர மோடி உலகின் இரண்டாவது புகழ்பெற்ற அரசியல்வாதி என பேஸ்புக் இணையதளத்தின் தலைமை இயக்க அதிகாரியான ஷெரில் சாண்ட்பர்க் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள முன்னணி தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர்,
உலகின் இரண்டாவது புகழ்பெற்ற அரசியல்வாதியான மோடிக்கு 18 மில்லியன் பேஸ்புக் நண்பர்கள் உள்ளனர். மோடியின் பேஸ்புக்கில் அவரது தாயார் அவரை ஆசீர்வதிக்கும் புகைப்படக்காட்சி வியப்பளிக்கிறது.
அது எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்தமானது. சமூக ஊடங்களின் முக்கியத்துவத்தை மோடி உணர்ந்துள்ளது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது.பேஸ்புக்கின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா உருவெடுக்க உள்ளது. இந்தியாவில் தான் அதிகம் பேர் மொபைல் போனில் பேஸ்புக் பார்க்கிறார்கள்.
தேர்தலின் போது பலர் பேஸ்புக்கை பயன்படுத்தியது உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது. இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரிய சந்தையாகும். உற்சாகத்துடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் கிடைக்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா காட்சி தருகிறது’’ என மிகுந்த மகிழ்ச்சியுடன் ஷெரில் கூறினார்.

Subscribe to:
Posts (Atom)